பொதுவாக 5 வருடங்களுக்கு ஒருமுறை பாடநூல்கள் திருத்தியமைக்கப்படுகின்றன. அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவால் பாடத்திட்டம் முடிவு செய்யப்படுகிறது. பல்வேறு துறை வல்லுநர்களும் பல்வேறு வகுப்பிற்கான பாடத்திட்டத்தினை வரைவு செய்கின்றனர் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பாட வல்லுநர்கள் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள் அந்தந்தப் பாடங்களுக்குரிய நூல்களை எழுதுகிறார்கள். அனைத்துப் பாடநூல்களும், குறுந்தகடுகள் மற்றும் லேசர் அச்சுவடிவத்தில், தமிழ்நாடு பாடநூல் கழகத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. இக்கழகம் குறுந்தகடுகளைக் கூர்ந்தாய்வு செய்து அச்சடிக்க ஆணை வழங்குகின்றது.
மாணாக்கர்களுக்குப் பாடநூல்களின் சுமையைக் குறைக்கும் பொருட்டு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறை அறிமுகப்படுத்தப்பட்டதையொட்டியும் 8-ஆம் வகுப்பு வரையிலும் முப்பருவக் கல்விமுறை 2012-2013 ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2013-2014 ஆம் ஆண்டு முதல் முப்பருவக் கல்விமுறை 9-ஆம் வகுப்பிற்கும் விரிவு படுத்தப்பட்டது.
இந்த முறையின் அடிப்படையில், பாடநூல்கள் மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டன. தற்போது 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கான முப்பருவப் பாடநூல்கள் A4 size - ல் வெளியிடப்பட்டுள்ளன. 9 மற்றும் 10 ஆம் வகுப்பிற்கான மொழிப் பாடநூல்கள் பருவ இதழ் வடிவிலும் மற்ற பாடப் புத்தகங்கள் A4 வடிவிலும் வெளியிடப்பட்டுள்ளன. 11 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பாடப் புத்தங்கள் A4, A5 மற்றும் C5 அளவுகளில் வெளியிடப்படுகின்றன. பாடநூல்களின் தரத்தினை உறுதி செய்யும் பொருட்டு 1 முதல் 10-ஆம் வகுப்பிற்கான நூல்கள் 80 GSM HT Map Litho தாள்களில் பல வண்ணங்களில் அச்சடிக்கப்படுகின்றன. 11 மற்றும் 12-ம் வகுப்புக்கான பாடநூல்கள் 60 GSM மற்றும் 70 GSM தாள்களில் ஒரே நிறம் மற்றும் பல நிறங்களிலும் அச்சடிக்கப்படுகின்றன.
அச்சடித்தல் செயல்முறைகள் முக்கியமாக நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது.
மேற்கண்ட அச்சடிக்கும் முறைகளில் ஆப்செட் பிரிண்டிங் முறையே அதிக அளவிலான புத்தகங்களை மிகத்தரமான முறையில் அச்சடிக்க உகந்ததாகவுள்ளது.
ஆப்செட் அச்சடித்தலின் செயல்முறை 3 நிலைகளாக வகைப்படுத்தப்படுகிறது.
அச்சிடுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டவுடன் அச்சகத்தாருக்கு குறுந்தகடு அல்லது ஃபிலிம் பொருட்கள் (Film Materials) வழங்கப்படுகிறது. அச்சகத்தார் முதலில் டிஜிட்டல் (Digital Proof) படி வழங்குவார்கள். அதில் பாடப் பொருட்கள் ஒப்பிடப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, திருத்தங்கள் மேற்கொண்டு இறுதி ஒப்புதலுக்காக மெசின்படி (Machine Proof) சமர்ப்பிக்கப்படுகிறது.
இக்கழகத்தின் படி திருத்துநர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு மூலம் திருத்தங்களற்ற (Machine Proof) படி ஒப்புதல் வழங்கி அச்சிட வழிவகை செய்கிறது.
அச்சகப் பணியின் இரு நிலைகள்
இந்த முறையில் தனித் தனித்தாள்கள் 8 பக்கம் /16 பக்கம் கொண்ட ஆக A4/C5 அளவுகளில் தனித்தனியாக அச்சடிக்கப்படும் இதன் தரத்தை அச்சகத்தார் ஒப்பந்தத்தின் அடிப்படையில் உள்ளதை உறுதி செய்யவேண்டும்.
இம்முறையில் இருபக்கங்களிலும் அச்சடிப்பதற்கு சுருள் தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இரு பக்கங்களும் 3/4 மடிப்புகளில் ஒரே நேரத்தில் அச்சடிக்கப்படுகின்றது. அச்சடிக்கப்படும் ஒவ்வொரு பதிவின் தரத்தினை உறுதி செய்யும் பொருட்டு தனிச் சுருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அச்சுக்குப் பின்னுள்ள பணிகளில் மிக முக்கியப் பணி. புத்தகங்களைக் கட்டுகளாகக் கட்டி அனுப்புதல் ஆகும்.
தானியங்கி மடிப்பு இயந்திரத்தின் மூலம் அச்சிடப்பட பக்கங்கள் பார்க்கத் தகுந்த முறையில் மடித்து, சேகரிக்கப்பட்டு பக்க எண் வரிசைப்படி படிக்கத் தகுந்த முறையில் தொகுக்கப்படும்.
96 மற்றும் அதற்குக் குறைவான பக்கங்கள் கொண்ட பாடநூல்கள் Saddle wire மூலம் தைக்கப்படும் 96 பக்கங்களுக்கு மேல் உள்ள புத்தகங்கள் side wire தையல் மூலம் கட்டப்படும்.
பாடநூல்களை எளிமையாகத் திறப்பதற்கு ஏதுவாக அச்சடிக்கப்பட்ட அட்டைகள் புத்தகங்களின் பக்க ஓரங்களில் ஒட்டப்படும்.
தானியங்கு வெட்டு இயந்திரம் மூலம் புத்தகங்களின் 3 பக்கங்களிலும் சரியான எல்லைக் கோடு மற்றும் அளவுகளில் சரிசெய்யப்படும் பாடநூல்களின் அனைத்து மூலைகளும் எளிதாகத் திருப்ப வசதியாகவும், சம அளவிலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பாடநூல்கள் சரியான எண்ணிக்கையில் அடுக்கப்பட்டு 5 ply jute / tape மூலம் 4 மூலைகளிலும் உறுதியாகக் கட்டப்படும். கட்டப்பட்ட பிறகு Kraft Sheet, Labels இரு பக்கங்களிலும் ஒட்டப்படும்.
அனுப்பத்தகுந்த நிலையிலுள்ள பாடநூல்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் விற்பனைப் பிரிவிற்கு எந்தவிதப் பழுதுமின்றி அனுப்பி வைக்கப்படும்.
அனுப்பத்தகுந்த நிலையிலுள்ள பாடநூல்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல்தாள்களின் விலை, இயந்திரங்களின் கொள்ளளவு, EMD வைப்புத்தொகை, வங்கி உத்திரவாதம் மற்றும் காப்பீடு (தீ மற்றும் திருடு போதல் காரணங்களுக்காக) அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படும்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தரமான பாடநூல்களைத் தொடர்ந்து அச்சடித்து வருகின்றது. தொழில்நுட்பப் பிரிவுப் பணியாளர்கள் பாடநூல்களின் தரம், அளவு மற்றும் இக்கழகத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட தொழில்நுட்ப நிபந்தனைகளை மேற்பார்வை செய்கிறார்கள். தொழில்நுட்பப் பணியாளர்கள் பாடநூலின் முதல் ஆய்வு அறிக்கையை அச்சகத்தாரிடம் வழங்குவார்கள்.
ஆய்வின் போது தொழில்நுட்பப் பணியாளர்கள் பின்வரும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவார்கள்.
முதல் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் அச்சகத்தாரால் வழங்கப்பட்ட புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் வட்டார புத்தகக் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்படும்.
விலையில்லா பாடநூல்கள் பள்ளிக் கல்வித்துறை மற்றும் நலத்துறையினரிடம் வழங்கப்படுகிறது. விற்பனைக்கான நூல்கள் தமிழ்நாடு முழுவதும் டீOnline TACTV CSC CENTER, சில்லரை விற்பனை மற்றும் உரிமம் பெற்ற மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்கப்படுகின்றது.
2005-2006-ஆம் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள் வழங்குவதாக அரசால் அறிவிக்கப்பட்டது. 32 வருவாய் மாவட்டங்களிலும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தால் கண்டறியப்பட்ட நோடல் பள்ளிகள் மற்றும் மாவட்ட அளவில் முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர், ஆகியோர்க்கு நேரடியாக அச்சகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. பின்பு இந்நூல்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. ஆதிதிராவிட நலத்துறை, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் கள்ளர் சீரமைப்பு நலத்துறை பள்ளிகளுக்குத் தேவையான நூல்கள் அந்தந்தத் துறையினரின் இயக்குநரகம் மூலம் வழங்கப்படுகின்றன.
டில்லி, மகாராஷ்ட்ரா, சண்டிகர், அந்தமான் நிக்கோபர் தீவுகளில் தமிழ் பயிலும், 9 மதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்ப் பாடநூல்கள் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மூலமாக ஒவ்வோராண்டும் அரசாணைப்படி இலவசமாக வழங்கப்படுகின்றது.
விற்பனைப் பிரதிகள் ஆன்லைன் TACTV CSC மையம், மொத்த விற்பனை நிலையங்கள், அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இது மட்டுமன்றி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தரைத்தளத்திலுள்ள விற்பனை நிலையம். 68, கல்லூரிச் சாலை, டிபிஐ வளாகம், சென்னை-600 006 என்ற முகவரியிலும் இயங்கி வருகிறது. இவ்விற்பனை நிலையத்தின் மூலம் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாநில பாடத்திட்டத்தின் அனைத்துப் பாடநூல்களும் தெலுங்கு, கன்னடம், உருது, அரபி, சமஸ்கிருதம் போன்ற சிறுபான்மை மொழி நூல்களுக்கான பாடநூல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. புதிய விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டு மாணவர்களுக்கு அனைத்துப் பாடப் புத்தகங்களும் எளிதில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எழுதுபொருள் விற்பனை நிலையங்கள் தமிழ்நாடு பொது விற்பனை வரிச்சட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.10,000 முன்பண வைப்புத் தொகை மற்றும் பதிவுத் தொகை ரூ.50 பெறப்பட்டு புதிய உரிமம் வழங்கப்படுகிறது. தற்போது விற்பனையாளர்களின் எண்ணிக்கை 2000க்கும் அதிகமாக உள்ளன.
புதிய உரிமங்களின் தகுதிக்காலம் 3 வருடங்கள் ஆகும். 3 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பித்தல் கட்டணம் ரூ.200 வசூலிக்கப்பட்டு உரிமம் புதுப்பிக்கப்படுகிறது.
நகரங்களில் உரிமங்கள் உறுப்பினர் செயலர் போன்றோராலும் மற்ற இடங்களில் தொடர்புடைய வட்டார அலுவலர்களாலும் புதுப்பிக்கப்படுகின்றன.
நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதி மாணவர்கள் எவ்வித சிரமமுமன்றி அனைத்துப் பாடப் புத்தகங்களையும் எளிதில் பெறும் வகையில் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்குத், தேவையான பாடநூல்கள் கடலூர் மற்றும் நாகப்பட்டின மண்டல அலுவலகங்கள் மூலமாக வழங்கப்படுகிறது.