பணிகள்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மாணவர்களுக்கான பாடநூல்களை அச்சடித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் வழங்கி வருகிறது. கீழ்க்கண்ட நூல்களை இக்கழகம் அச்சடித்து வழங்குகிறது.

  1. 1 முதல் 12 ஆம் வகுப்பிற்கான பாடநூல்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியிலும் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது.
  2. 1 முதல் 12 ஆம் வகுப்பிற்கான சிறுபான்மை மொழிப் பாடநூல்கள் (தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் உருது).
  3. சமஸ்கிருதம் மற்றும் அராபிக் மொழிப் பாடநூல்கள் 6 முதல் 10 ஆம் வகுப்பிற்கு மட்டும்.
  4. 1 முதல் 10 ஆம் வகுப்பிற்கு தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் உருது மொழிவழிப் பாடப் புத்தகங்கள்.
  5. 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான தொழிற்கல்விக்கான பாடப்புத்தகங்கள்.
  6. ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான பாடப்புத்தகங்கள் (SCERT).
  7. பாலிடெக்னிக் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள்.
  8. SABL – அட்டைகள்.

கூடுதல் பொறுப்புகள் - சிறப்புப் பணிகள்

தமிழக அரசின் இதரத் துறைகளும் தங்களுக்குத் தேவையான அச்சுப் பணிகளைப் பாடநூல் கழகத்திடம் ஒப்படைக்கிறது. 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான ஆதிதிராவிடர் நலத்துறை வெளியிடும் கையேடு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியிடும் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் தொகுப்பு ஆகியவை குறைந்த செலவில் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. மேலும் SCERT வளநூல்கள், தொழில்நுட்பக் கல்விப் பாடநூல்கள், புவியியல் வரைபடநூல் ஆகியவையும் இக்கழகத்தால் அச்சிடப்படுகின்றன. இப்பணிகளைக் குறைவான செலவில் இக்கழகம் செயல்படுத்தி வருகிறது.

இணையதள சேவைகள்